உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

21 comments:

    அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ?? :-)

    On June 2, 2008 at 3:39 AM Reegan said...

    // இமைப்பொழுதிலும்
    கவிதை எழுதுவேன்.
    இமைப்பது நீயெனில். //

    // நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி! //

    // அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்! //


    ரொம்ப அருமையா இருக்கிறது... அருள்....

    anna ithukku than neenga kovilkku pooneengala..?!?
    naan yennamo maareteenganu ninaichen...!! ;-)

    //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்//
    azhagaana varigal..!! :-)

    On June 2, 2008 at 4:13 AM Senthil Kumar said...

    //நீ குடை விரித்ததும்
    குடை சாய்ந்தது
    மழை வண்டி!//

    //இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!//

    Superuuu...
    Kovil-la Site adikka Koodathunga...

    ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்...

    // உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!//

    அற்புதம் !

    //உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!//

    .....கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!

    /அப்ப பிறந்தநாளன்னிக்கு கோயிலுக்கு போயிட்டு வந்தது கவிதை சேகரிக்கவா ??/

    நான் என்னைக்குங்க்கா கோயிலுக்கு போனேன்? வீட்டில் எல்லோரோடும் போனதுண்டு அவ்வளவுதான்.

    கவுஜையெழுத கோயிலுக்கு போய்தான் பாக்கனுமா, என்ன? ;)

    /ரொம்ப அருமையா இருக்கிறது… அருள்/

    நன்றிங்க ரீகன்!

    @Sri,

    நான் எப்போ கோவிலுக்கு போனேன்? போனவாரம் திருப்பதிக்குதான் போனோம், ஆனா அங்க யாரும் அடிப்பிரார்த்தனையெல்லாம் பண்ணலையே :)

    நன்றி.

    /Superuuu
    Kovil-la Site adikka Koodathunga/

    அப்படியா செந்தில்? நீங்க கோயில் சிற்பங்களையெல்லாம் பார்த்ததில்லையா? ;)

    /ஆனா இந்த மாதிரி கவிதை எழுதுவதற்காக உங்களை மன்னிக்கலாம்/

    நன்றிங்க!

    /அற்புதம் !/

    நன்றிங்க சேவியர்!

    /கொஞ்சம் குறும்பு நிறைய அழகு..!!
    சூப்பர் அருள் !!!/

    நன்றிங்க ஆல்பர்ட்.

    நல்லாருக்கு ராசா ;)

    சூப்பர்!!!

    கோபிநாத், சின்னப்பையன், இருவருக்கும் நன்றிகள்!

    On June 3, 2008 at 2:36 AM Maragathavalli said...

    Epdi ipdi...?
    Super... unarvugal niraindha varigal..
    vaazhthukkal

    உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
    இனிப்பாய் இருக்கிறது.
    நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
    நினைத்துக்கொள்வது!

    *

    இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
    விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
    அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
    கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
    சில கவிதைகள்!

    *

    உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    *
    அடடா.. என்னே ஒரு அழகு.. அற்புதம் நண்பரே...
    வாழ்த்துக்கள் ;)
    இன்னும் எதிர்பார்க்கிறோம்..

    On June 4, 2008 at 5:59 AM selva said...

    உலகின் பெண்களுக்கெல்லாம்
    உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
    உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
    உனது பார்வை!

    ROmba Nallla Iruku.

    Anubavichu ezhudhareenga, hats off.......

    மரகதவல்லி, சரவணக்குமார், செல்வா,

    அனைவருக்கும் நன்றிகள்!

    On April 4, 2010 at 4:47 PM விக்னேஷ் said...

    நீங்க ரொம்ப நல்லா கவிதை எழுதுறீங்க அருள். உங்க கவிதை தான் என் காதலிக்கு அனுப்பிடு இருககேன் நன்றி