வரவேற்பறை மீன்தொட்டி
Wednesday, June 4, 2008 by Unknown
அறுபது பவுன் நகை போட்டு
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை தொட்டிமீன் மாதிரி!
ஹுண்டாய் i10 –ம் கொடுத்து
அமெரிக்க மாப்பிள்ளையுடன்
அலங்காரமாய் மகளை அனுப்பி வைத்தார்
வரவேற்பறை மீன்தொட்டி மாதிரி.
அவளும் விப்ரோ வேலையைத் துறந்து இல்லத்தரசியானாள்
வரவேற்பறை தொட்டிமீன் மாதிரி!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
பல வீடுகளில் இருக்கிறது
மீன் தொட்டியும் அதனுள்ளே மீனும்!
meen maadhiri thaan irukka vendumam, vidhiyin mael pazhi poda vendumam.
nandru arul... vaazhthukkal...
சரி அண்ணா அம்மாகிட்ட சொல்லிடறேன் அமெரிக்க மாப்பிள்ளை வேண்டாம்னு.... ஆனா அவங்கள எல்லாம் யார் அப்பறம் கல்யாணம் பண்ணிப்பா...?!?
ஹ்ம்ம் ... உண்மை அருள்...
ஆனா பல இடங்கள்ல மீன் தொட்டில வாழற மீனுக்கும் நம்மள போல உயிர் தான் இருக்குங்கிறத மறந்துடுறாங்க !!
@சாய்ராம்,
ம்ம்ம் கூடவே...அலங்காரமும், அதிகாரமும்.
@மரகதவல்லி,
ஒரு விளம்பரத்துல வருமே...தொட்டியில இருந்து ஒரு மீன் தப்பிச்சு தப்பிச்சு போகுமே... சும்மா ஞாபகம் வந்துச்சு சொன்னேன்!
@Sri,
அவங்கள எல்லாம் யார் அப்பறம் கல்யாணம் பண்ணிப்பாங்களா??? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு நல்ல மனசு இருக்கக் கூடாது! ;)
/ஆனா பல இடங்கள்ல மீன் தொட்டில வாழற மீனுக்கும் நம்மள போல உயிர் தான் இருக்குங்கிறத மறந்துடுறாங்க !!/
ம்ம்ம் உண்மைதான் ஆல்பர்ட்!
ஏன் அண்ணா சமீபத்துல எங்கயாவது பொண்ணு பார்க்க போய்
suffer-ஆனீங்களா..?? ;-)
அமெரிக்க மாப்பிள்ளை-ங்க மேல இவ்ளோ கோபம்...?? :-)
பொண்ணு பார்க்க போறதா? எனக்கு இன்னும் 'பொண்ணு பாக்கற' வயசுதான்! பொண்ணு பாக்கப் போற வயசு இன்னும் வரல :)
அப்புறம், அமெரிக்காவா இருந்தாலும் தமிழ்நாடா இருந்தாலும் திருமணத்துக்கு அப்பறம் வேலைய விட்டுட்டு வீட்ல இருக்கிறது கடினமாதான் இருக்கும்ங்கறது என்னோட புரிதல்!
நிதர்சனமான உண்மை!
அலங்காரமாய் இல்லையென்றாலும்,
ஆற்று மீணாய் துள்ளி குதித்து, இன்று
அகலமாய் கடலென விரிந்து கிடக்கும்
மீன் தொட்டியில்
ஆடம்பரமாய்,
ஆவலாய்
நீந்தும் ஒரு சிறிய மீன்.
:)
எல்லா வீடுகளிலும் இருக்கிறது
ஓவ்வொரு மீன் தொட்டி
நீளம் அகலம் வேறு
ஆயினும் தொட்டி தொட்டிதான்
மீன் மீன்தான்
அமெரிக்க மீனுக்கும்
அலங்காநல்லூர் மீனுக்கும் வாழ்க்கை ஒன்றுதான்!!!!!
@மாயா,
நன்றி. உங்கள் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க எனது வாழ்த்துகள் :)
@ஜிரா,
ரொம்ப சரியா சொல்லிட்டீங்க. மீனோட மகிழ்ச்சி தொட்டியோட அளவ பொறுத்து மாறுபடுது. அவ்வளவுதான்.
:))))
//அலங்காரமாய் இல்லையென்றாலும்,
ஆற்று மீணாய் துள்ளி குதித்து, இன்று
அகலமாய் கடலென விரிந்து கிடக்கும்
மீன் தொட்டியில்
ஆடம்பரமாய்,
ஆவலாய்
நீந்தும் ஒரு சிறிய மீன்.//
pathivai vida intha pinnoottam kavaranthathu :)))
வருகைக்கு நன்றிங்க ஜி.