கவிதைகள்
Thursday, July 22, 2010 by Unknown
கவிதைகள் கண்டெடுத்து வாசிப்பதென்பது
கனவுகளை மீட்டெடுப்பதைப் போல
மிக நுட்பமான செயலாகிவிட்டது.
எல்லாக்கவிதைகளும் முதன்முறை வாசிக்கும்பொழுதே ஈர்த்துவிடுவதில்லை.
ஈர்த்த எல்லாக்கவிதைகளும் மறுவாசிப்பில் நிலைப்பதில்லை.
[caption id="attachment_416" align="alignright" width="300" caption="கவிதைகள்"]
[/caption]
இலக்கியமெனக் கொண்டாடப்படும் கவிதை இலக்கணம் மீறியும் இருக்கலாம்.
இலக்கணம் மீறாக்கவிதை கண்டுகொள்ளப்படாமலே காலாவதியாகியிருக்கலாம்.
ஆபாசக் கவிதைகளென எதனையும் ஒதுக்கிவிட முடியவில்லை.
சிலநேரம் ஆபாசத்துக்குப் பின்னே ஆழமான வலியிருக்கிறது.
அதுபோல் அனைத்து அழகியல் கவிதைகளிலும் லயித்துவிட முடியவில்லை.
சிலநேரம் அழகியலுக்குள்ளே நச்சுக்கருத்து ஒளிந்திருக்கிறது.
ஆன்மீகக் கவிதைகளும் புரட்சிக்கவிதைகளும் அதனதன் எல்லையில் நின்றுகொண்டிருக்க
இயல்பான கவிதை இரண்டுக்குமிடையில் எங்கோ ஒளிந்திருக்கிறது.
கவிதைகளை ஹைக்கூ, குறள், வெண்பா என அளவுகளில் பகுக்காமல்
அன்பு, வீரம், நட்பு, காதல், தோழமையென வகைகளில் பகுத்திருந்தால்,
தாலாட்டைத் தேடும் கைகளில் பின்நவீனத்துவமும்,
தத்துவம் தேடும் கைகளில் காமத்துப்பாலும் சிக்காமல் இருக்கும்.
வெளிப்படையாய்ப் பேசும் கவிதைகள்
எல்லாவற்றையும் வெளிப்படையாய்ப் பேசிவிடுவதால்
எல்லோருக்கும் பிடிப்பதில்லை.
அந்தவகையில் மறைமுகமாய்க் குறியீடுகளால் பேசும் கவிதைகள் வாசிக்கிற எல்லாருக்கும் பிடித்திருக்கிறது.
காரணம், கவிதையின் குறியீடுகளை வாசகன் விருப்பத்திற்கேற்ப பொருள்கொள்வதுதான்.
கவிதைகளைப் பற்றி இங்கு குறித்ததையெல்லாம் பெண்களைப்பற்றியென நீங்கள் பொருள்கொள்வதைப்போல!

வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
ரசித்தேன் நண்பரே... நீங்கள் கவிதைகளைப் பற்றிச் சொன்னாலும், பெண்களைப் பற்றிச் சொன்னாலும் அழகுதான்...
உங்களிடம் சில மாதங்களுக்கு முன் செல்பேசியில் பேசி இருக்கிறேன்.வினோத்(இந்தோர்) இன் நண்பன்...ஞாபகமிருக்கிறதா?
for comment follow up..
தமிழ்ப்பறவை, நன்றி! நல்லா நினைவிருக்குங்க ;)
ராஜா, சிரிப்புக்கு என்ன பொருள்?
Sirappu
நன்றிங்க மதன்!
very super ;thanks
nan ethir partha en karpanaigal prathi palikkindrana migaum arumai
alagana kavithai unga kavithai
i like