மார்கழி விடியலின் பனிக்குளிரில் கோலமிடும் எனது தங்கைக்கு நான் உதவுவதெல்லாம், எதிர் வாசலில் கோலமிடும் உன்னை ரசிக்கத்தானென்பதை புரிந்துகொள்கிற அறிவாளியும் நீதான்.
முன்பகலுக்குள் வீதியின் மற்றக் கோலங்ககெல்லாம் கால் தடங்களாலும் வாகனத்தடங்களாலும் சிதைந்துபோக உன் வாசல் கோலம் மட்டும் மாலைவரை சிதையாமல் இருக்க அந்த கோலத்தின் அழகு மட்டுமே காரணமென நம்பும் முட்டாளும் நீதான்.
எனது தங்கையும் நீயும் மிகப்பெரிய கோலங்களை வரையத்துவங்கி இடமில்லாததால் இரண்டு கோலங்களையும் இணைத்து ஒரே கோலமாக்கிவிட்டு நீ பார்த்த பார்வையில் நம் காதலுக்கான முதல் புள்ளி வைக்கப்பட்டது!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
ஜனனியின் அத்தை : மித்ரா பரவால்ல அமைதியா இருக்கா. ஜனனியா இருந்தா இந்நேரம் என்ன சட்னியாக்கியிருப்பா.. மித்ரா : ஜனனி உங்கள சட்னியாக்கினா, நான் உங்கள தோசையாக்கிடுவேன்!
(என்னா வில்லத்தனம்?)
*
வீட்டிலிருந்து கடற்கரைக்கு கிளம்பும்போது அண்ணா, அண்ணி, மித்ரா மூவரும் ஒரு பைக்கில் கிளம்ப, நான் தனியே ஒரு பைக்கில் கிளம்ப, மித்ரா சொல்லிச் சிரிக்கிறாள் : சித்தப்பா உங்க பின்னாடி உட்கார ஆள் இல்லையே..
( நான் என்ன சொல்ல? :) )
*
நான் US கிளம்பும்போது சமையல் பொருட்கள், பாத்திரங்களை அடுக்கிக்கொண்டு வந்ததைப் பார்த்த மித்ரா என்ன நினைத்துக்கொண்டாளோ, பக்கத்து வீட்டுக்காரர் ‘உங்க சித்தப்பா எதுக்கு அமெரிக்கா போயிருக்காங்க?’ என்று கேட்டபோது சொல்லியிருக்கிறாள் : ‘எங்க சித்தப்பா சமையல் வேல செய்ய போயிருக்காங்க!’
( அவ சொன்னதும் பாதி உண்மைதான் :))
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
மேலே உள்ள தெலுங்குப் பாடலுக்கான எனது தமிழ் வரிகள் கீழே :
பெண்ணழகி பெரும்பேரழகி ஐம் பொன்னழகி கருங் கண்ணழகி என்னழகா என் பேரழகா பூ சொல்லழகா அது செய்யழகா
நீயே காதலி நானே சாரதி காதல் பயணம் பழகு பாதை இருக்கு பாதம் இருக்கு ஏனோ முளைக்கும் சிறகு
விலகி பழகி நழுவி தழுவி விரலும் விரலும் கோர்த்தால் சித்தம் இதழும் இதழும் கோர்த்தால் முத்தம்
ச ச ரி ரி க க பதநி ச ச ரி ரி க க பதநி
நீ நடக்கும் சாலையெல்லாம் பூச்செடிகள் பூத்துக் குலுங்கும் நீ பேசும் வார்த்தையெல்லாம் தேனீக்கள் தேடித் திரியும் நீ சிரிக்கும் சிரிப்பையெல்லாம் விண்மீன்கள் விலைக்கு வாங்கும் நீ சொல்லும் கவிதையெல்லாம் என்காதல் கொள்ளை கொள்ளும் இரவின் மடியில் இதயம் உறங்க இமைகள் விசிறி விசிறும் கனவின் தயவில் இமைகள் உறங்க இசையாய்த் துடிக்கும் இதயம்
கோவிலுக்கு நீவரும் பொழுது உனைக்கண்டு கோபுரம் குனியும் காதலிக்கும் உயிர்கள் எல்லாம் நீவந்தால் உயிலை எழுதும் மாமழையில் நனையும் பொழுது உனைத்தொட்டு மழையும் குளிக்கும் நள்ளிரவைத் தாண்டும் விடியல் நீப்பேச உறக்கம் உறங்கும் உறங்கும் வரையில் மயங்கும் நிலையில் இமையில் இருக்கும் கனவு விழிக்கும் வரையில் விழியின் திரையில் தனியாய்த் தவிக்கும் நனவு
இரவும் பகலும் கனவும் நனவும் நீயும் நானும் பேசியது காதல் நீயும் நானும் பேசியது காதல்
ச ச ரி ரி க க பதநி ச ச ரி ரி க க பதநி
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.