பச்சக் கலர் கேரட்

ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

*

ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் 'யாரும் மூச்சு விடக்கூடாது', 'யாரும் மூச்சு விடக்கூடாது' ன்னே சொல்றாங்கம்மா..
அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

*

அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது...'நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்'

*

அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
(நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)

*
அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.

*
ஜனனி : மாமா, நான் சின்ன பாப்பாவா, பெரிய பாப்பாவா?
நான் : நீ சின்ன பாப்பா தான்.
ஜனனி : நான் சென்னைக்குப் போனா?
நான் : சென்னைக்குப் போனா, மித்ரா சின்ன பாப்பா. நீ பெரிய பாப்பா.
ஜனனி : சேலத்துக்குப் போனா?
நான் : சேலத்துக்குப் போனா, அம்சா பெரிய பாப்பா. நீ சின்ன பாப்பா.
ஜனனி : என்ன மாமா. மாத்தி மாத்தி சொல்ற? எதாவது ஒன்னு சொல்லு மாமா!
(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)

*
நான் : ஜனனி, ஊருக்கு வரும்போது உனக்கு என்ன வாங்கிட்டு வரட்டும்?
ஜனனி : பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.
(இனிமேல் அவளிடம் எதுவும் கேட்க் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்)
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

33 comments:

    Cute!

    \\தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
    \\

    கலக்கல் பதில்..ரொம்ப சுட்டி போல :)

    \\(வர வர ஜனனி கூட என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்)
    \\

    ஹா ஹா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை :))

    //பச்சக் கலர் கேரட் வாங்கிட்டு வா மாமா.//
    குழந்தைக் கேட்கறால்ல அண்ணா, மறக்காம வாங்கிட்டுப் போய் குடுங்க‌..!! ;-)

    வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டுல்ல..மாமா காதல் எந்திரம் எழுதி எல்லாரையும் சுத்திவிட்டா மருமக கேள்வி யால சுத்தவிடறா.. ஹஹ்ஹா

    /Cute!/

    வருகைக்கு நன்றிங்க பத்ரி!

    On July 30, 2008 at 4:20 AM Senthil Kumar said...

    //அக்கா : கையெழுத்தெல்லாம் முத்து முத்தா இருக்கனும் பாப்பா.
    ஜனனி : ஹைதராபாத்ல இருந்து மாமா வாங்கிட்டு வந்த முத்தாம்மா?
    அக்கா : ஜனனீஈஈஈஈ, அழகா குண்டு குண்டா எழுதுன்னு சொல்றேன்.
    (நல்ல வேளை பெங்களூர்ல வெடிச்ச குண்டான்னு கேட்கல)//

    ஹஹ்ஹாஹஹ்ஹா..

    ஒரு வேளை நீங்க பெங்களூரில் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருப்பாங்க...

    On July 30, 2008 at 5:11 AM aarthy nagarajan said...

    marakkama பச்சக் கலர் கேரட் vangittu ponga!!!!! marantudaeenga

    /கலக்கல் பதில்..ரொம்ப சுட்டி போல /

    ரொம்பவே!

    /ஹா ஹா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை :))/

    ஹ்ம்ம்ம் :)

    /குழந்தைக் கேட்கறால்ல அண்ணா, மறக்காம வாங்கிட்டுப் போய் குடுங்க‌..!! /

    சரிங்கக்கா... வாங்கிக் கொடுத்துட்றேன் ;)

    /வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில் உண்டுல்ல..மாமா காதல் எந்திரம் எழுதி எல்லாரையும் சுத்திவிட்டா மருமக கேள்வி யால சுத்தவிடறா.. ஹஹ்ஹா/

    ம்ம்ம் அவ வளர வளர கொஞ்சம் பயமாதான் இருக்கு ;)

    /ஒரு வேளை நீங்க பெங்களூரில் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருப்பாங்க/

    அதுவும் சரிதான் :)

    /marakkama பச்சக் கலர் கேரட் vangittu ponga!!!!! marantudaeenga/

    நாட்ல எத்தன ஜனனி இருக்கீங்க? ;)

    நன்றி!!! அருட்பெருங்கோ!

    janani rocks!

    நன்றி!!! அருட்பெருங்கோ!

    நன்றிக்கு நன்றியா? :)

    /janani rocks!/

    அவ எப்பவும் கலக்குறா... தூரத்துல இருக்கிறதால நமக்குதான் எல்லா விசயமும் தெரியறதில்ல!

    //அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
    ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.

    இதற்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் அப்பா முழிக்க, அடுத்து அவள் சொன்னது…’நான் எப்பவும் உண்மையேதான் தாத்தா பேசுவேன். பொய்யெல்லாம் பேச மாட்டேன்’//

    இதுதான்பா CUTENESS....


    :)

    ஜனனி... நீ கலக்கு மா..

    ;)

    :) :)

    :))) Ippa ivingalum nammala round katta aarambichittaangalaa... avvvvv...

    /இதுதான்பா CUTENESS

    ஜனனி நீ கலக்கு மா../

    ஜனனி சார்பா நன்றிங்க சரவணக்குமார்!

    வருகைக்கு நன்றிங்க ரவி!

    /:))) Ippa ivingalum nammala round katta aarambichittaangalaa… avvvvv/

    தொலைபேசியிலயே இவ்வளவும். நேர்ல போனா இன்னும் கிடைக்கும் :)

    மிக‌வும் இர‌சித்தேன்!

    ஜனனி கண்ணு.... எப்படிம்மா இப்படியெல்லாம்?

    //சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.//

    பாசக்கார புள்ள‌

    /மிக‌வும் இர‌சித்தேன்!/

    நன்றிங்க முருகானந்தம்!

    /ஜனனி கண்ணு. எப்படிம்மா இப்படியெல்லாம்? /

    தல, ஜனனி, அவங்க மாமா மாதிரியே அறிவாளி ;)

    /பாசக்கார புள்ள‌/

    :)

    On August 11, 2008 at 5:58 AM kokila said...

    /*அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
    ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது. */


    Mama mathiriyae eppavae kadhai ezhudaraa pola Janani

    Saw her reciting thirukkal..ungala madhiriyae vara training-a?

    THIS SITE IS VERY NICE

    //அம்மா : சரி ஜனனி நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்.
    ஜனனி : சரி அம்மாச்சி. மனசுல என் ஞாபகம் வந்துச்சுனா ஒடனே கெளம்பி வந்துடுங்க. காலைலயா இருந்தா வாங்க. நைட்டா இருந்தா வராதீங்க இருட்டா இருக்கும். நான் கனவுல வந்து பிஸ்கட் தர்றேன், சாப்பிட்டு தூங்கிட்டு காலைல எந்திருச்சு வந்துடுங்க.//

    romba sweet :-)

    /Mama mathiriyae eppavae kadhai ezhudaraa pola Janani/

    ம்ம்ம் என்ன விட அவ நல்லாவே கதை சொல்லுவா :)

    /Saw her reciting thirukkal..ungala madhiriyae vara training-a?/

    என்ன மாதிரியா? இல்ல நல்ல மாதிரி வரனும் :)

    /THIS SITE IS VERY NICE/

    நன்றிங்க பாண்டி!

    /romba sweet /

    இன்னொரு ஜனனியா? :-) நன்றி

    பச்ச கலர் கேரட்டா????!!!!! :)
    பாப்பா ஒரே ஜாலிப் பாப்பாவாகீதே!!!!!!

    //
    ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
    அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
    ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!

    *

    ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
    அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
    ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும் மூச்சு விடக்கூடாது’ ன்னே சொல்றாங்கம்மா..
    அக்கா : யாரும் பேசக்கூடாதுங்கறத தான் அப்படி சொல்றாங்க. மிஸ் சொல்றாங்கன்னு நீ மூச்சு விடாம இருந்துடாத பாப்பா!

    *

    அப்பா : என்ன ஜனனி நீ. நல்லாவே எழுத மாட்டேங்கற. நிறுத்தி நிதானமா எழுது.
    ஜனனி : தாத்தா, நான் ஒழுங்காதான் தாத்தா எழுதறேன். இந்த பென்சிலுக்கு தான் தூக்கமா வருதுன்னு நெனைக்கறேன். அதான் இப்படி எழுதுது.
    //

    பாப்பா ரொம்ப புத்திசாலி :)

    On October 16, 2009 at 2:09 PM Azhagesan.sundaram said...

    JANANI is Great,

    On May 25, 2011 at 8:42 AM keerhika said...

    wow ....
    janani pathi solla no wordss.........