பேரலையும் மாமழையும்
Friday, May 21, 2010 by Unknown
[caption id="attachment_315" align="alignright" width="300" caption="பேரலையும் மாமழையும்"]
[/caption]
மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.
“கடல் நிறைந்து அலைகளாய் உன்னிடம்
வழிகிறது என் காதல்” என்கிறாய்.
“வான் நிறைந்து மழைச்சாரலாய் உன்னிடம்
பொழிகிறது என் காதல்” என்கிறேன்.
உள்ளங்கையில் கொஞ்சம் கடல் அள்ளி
“இந்தா என் காதல்” என்கிறாய்.
நானும் கொஞ்சம் மழை பிடித்து
“இந்தா என் காதல்” என்கிறேன்.
வேகமாய் வந்த
அலையொன்று எனது காதலையும்
மழைச்சாரல் உனது காதலையும்
அள்ளிச்சென்றன.
உள்ளங்கை விரித்து உதடு சுழித்து
“நம் காதலைக் காணோம்” என சிணுங்கினாய்.
அலை சென்றதும், மழை நின்றதும்
காணாமல் போன காதலை
கண்டுபிடிக்க வேண்டுமென ‘இச்’சரிக்கிறாய்.
மீண்டும் துவங்குகிறது நமக்குள்…
பேரலையும் மாமழையும்!

மழைநாளில் கடல் இரசிக்க வேண்டுமென நச்சரித்தாய்.
மழை துவங்கிய ஒரு மாலைப்பொழுதில்
கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம்.
“கடல் நிறைந்து அலைகளாய் உன்னிடம்
வழிகிறது என் காதல்” என்கிறாய்.
“வான் நிறைந்து மழைச்சாரலாய் உன்னிடம்
பொழிகிறது என் காதல்” என்கிறேன்.
உள்ளங்கையில் கொஞ்சம் கடல் அள்ளி
“இந்தா என் காதல்” என்கிறாய்.
நானும் கொஞ்சம் மழை பிடித்து
“இந்தா என் காதல்” என்கிறேன்.
வேகமாய் வந்த
அலையொன்று எனது காதலையும்
மழைச்சாரல் உனது காதலையும்
அள்ளிச்சென்றன.
உள்ளங்கை விரித்து உதடு சுழித்து
“நம் காதலைக் காணோம்” என சிணுங்கினாய்.
அலை சென்றதும், மழை நின்றதும்
காணாமல் போன காதலை
கண்டுபிடிக்க வேண்டுமென ‘இச்’சரிக்கிறாய்.
மீண்டும் துவங்குகிறது நமக்குள்…
பேரலையும் மாமழையும்!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.
லைலா வந் தப்பறம் எழுதிய கவிதையா :)
..//‘இச்’சரிக்கிறாய்.
மீண்டும் துவங்குகிறது நமக்குள்…
பேரலையும் மாமழையும்!//..
ம்ம்ம்.
எங்க போயிருந்தீங்க இத்தனை நாளா?
அன்பு பேரலையும், அன்பு மாமழையும் பொழிந்து குளிர்சுரம் அடிக்க வைத்துவிட்டீர்கள் அருமை
ம்ம்...ரொம்ப நாளைக்கப்புறம், எப்படி இருக்கிறியள் அருட்பெருங்கோ?
ஒரு காலத்துல எப்பொழுதும் பார்க்க கிடைக்கிற இந்த புரொபைல் படத்தை, தமிழ்மணத்துல பாக்கிறது எவ்வளவு நாளைக்கு பிறகு...
நல்லாருக்கு சார். வாழ்த்துகள்
@ முத்துலட்சுமி,
லைலா போனதுக்கப்புறம் எழுதினது :)
@ மோனி,
எங்கேயும் போகலங்க•.. தமிழ்மணம், வலைப்பதிவுன்னு எங்கேயும் போக முடியல•.. வேலைப்பளு :(
@ வேலு,
நன்றி !!!
@ தமிழன்,
இன்னும் நினைவில் வைத்திருப்பதில் மகிழ்ச்சி ;)
@ ஆடுமாடு,
ஆகா.. கொஞ்சம் இடைவெளி விட்டு வந்தா சார்னு சொல்லிட்டீங்க
:)
நல்லா இருக்கு :)
Simply great.
மிக அழகு அந்த கடலும் இந்த கவிதை மழையும் வெகுநாட்களுக்கு பிறகு அருட்... வாழ்த்துகள்!!
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்க பதிவை பார்ப்பதற்கே சந்தோஷமா இருக்கு அருள்.
எப்படி இருக்கீங்க?
எத்தனை மறக்க முடியாத காதல் கவிதைகளை ரசித்த இடமிது. மீண்டும் காதலோடே எண்ட்ரியாகியிருக்கீங்க மிக்க மகிழ்ச்சி.நல்வரவு.
com on thozhaa!! konjam nidhaana paduthikiradhukaaga padichitu irukaen!! ;)
பேரலையும் மாமழையும் - நல்ல படிமம்
நன்றி பாலகுமார், வழிப்போக்கன்!
வெகுநாட்களுக்குப் பிறகும் தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி சினேகிதி!
நலம், நாடோடி இலக்கியன்! நீங்க எப்படி இருக்கீங்க? பேசி இரண்டாண்டுகளுக்கு மேலிருக்குமில்லையா?
"நிதானமா" படிங்க ஆல்பர்ட் :)
நன்றி சாய்ராம். உங்க புது வலைமனை கலக்குது :)
good
நன்றி கார்த்திக்