ஊருக்கு புதிய பேருந்துநிலையம் வந்ததிலிருந்து நிறைய மாற்றங்கள்.
பிரபலமான உணவகங்களும் விடுதிகளும் புதிய பேருந்துநிலையமருகே இடம்பிடித்தன.
மிகப்பெரிய விளம்பரப் பலகைகளும், கட்டவுட்டுகளும் கூட இடம்பெயரத் துவங்கின.
ஊருக்குள் போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டிருந்தது. [caption id="attachment_430" align="alignright" width="300" caption="பேருந்து நிலையம்"]பேருந்து நிலையம்[/caption]
வெளியூர் செல்லும் பேருந்துகள் இனி பழைய பேருந்து நிலையத்துக்குள் செல்லாவாம்.
நகரப்பேருந்துகளுக்கும், சிற்றுந்துகளுக்கும் மட்டுமே அனுமதி.
கடலை வண்டிக்காரர்களும், இரவுநேர தள்ளுவண்டிகளும் கூட இடம் மாறினார்கள்.
பிச்சைக்காரர்களும் கைவிட்டுப்போனபிறகு,
பழைய பேருந்துநிலையம்
கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து கொண்டிருந்தது.
அழகான இளம்பெண்ணைச்
சக்களத்தியாய் ஏற்றுக்கொண்டுவிட்ட
மூத்தாளைப் போல!
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

7 comments:

    பழைய பேருந்து கதை நல்லா தான் இருக்கு அருட்..

    ஆனால் லேசாய் முகம் சுளிக்க வைக்கிறது
    கடைசி வரிகள் சில...

    “ அழகான இளம்பெண்ணைச்
    சக்களத்தியாய் ஏற்றுக்கொண்டுவிட்ட
    மூத்தாளைப் போல! ”

    ம்ம்ம் கருத்துக்கு நன்றிங்க தோழி!

    வேறென்ன‍ சொல்ல‍னு தெரியல :)

    On September 7, 2010 at 5:38 PM malathy said...

    வனக்கம் ....உங்கள் ப்ளாக் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது...அருமையாக எழுதுகிறீர்கள்...

    நன்றிங்க மாலதி!

    On November 2, 2010 at 10:20 AM varatharaj said...

    பழைய பேருந்து நிலையதின் கதை மிக அருமை
    அங்கு நிலவும் காட்சிகலை கன்முன்னெ நிருத்துகிரீர்கல்

    நன்றி வரதராஜ்!

    On April 29, 2011 at 5:35 AM prathana said...

    kavithai vacheikalam but rasikamudiyala ok