வேளச்சேரி தரமணி சாலையை ஒட்டியிருந்த
ப்ளாட்பாரக் குடிசைகள் ஓரிரவில் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
அடுத்தடுத்த நாட்களில்
புத்தம்புதிய தார்ச்சாலை மினுமினுப்புடன் அகண்டு நீண்டிருந்தது..
ஆறேழு ஆட்டுக்குட்டிகளை விழுங்கிய
மலைப்பாம்பு படுத்திருப்பதைப் போல![caption id="attachment_434" align="alignright" width="300" caption="மித்ரா-ஜனனி"]மித்ரா-ஜனனி[/caption]

*

ஒரு ரூபாய் நாணயத்தை
இடக்கைக்கும் வலக்கைக்கும்
மாற்றி மாற்றிப் போட்டு
இரண்டு கைகளையும் மூடி
எந்தக் கையிலென கேட்டாள் ஜனனி.
நாணயம் வலக்கையில் இருந்ததைப் போலிருந்தது.
அவள் ஏமாந்து போகக்கூடுமென
இடக்கையிலிருப்பதாய் மாற்றிச் சொன்னேன்.
உள்ளங்கை விரித்துக் காண்பிக்க..
நாணயம் சிரித்தது இடக்கையில், இருவரையும் ஏமாற்றியபடி!

*

யானை சவாரி போகும் ஆசையில்
யானை பொம்மை மீதமர்ந்து
அதன் கால்களை உடைத்து விட்டாள் மித்ரா.
யாரும் பார்க்கும் முன்னே
மேல்பாதி உடைந்திருந்த காரின் மீது
யானை உடம்பைப் பொருத்தியும் விட்டாள்.
அறுவை சிகிச்சை முடிந்(த்)த மகிழ்ச்சியில்
வீடு முழுக்க சுற்றிக்கொண்டிருந்தார்கள்
மித்ராவும், யானையும்…
கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு!

*

திருப்பூரில் பேருந்திலேறியதும்
சன்னல் நிலவுக்கு டாட்டா காட்டி
உறங்கிப்போன ஜனனி,
கரூர் வந்து
மொட்டைமாடி நிலவைப்பார்த்து சொன்னாள்,
‘இந்தியாவுல ரெண்டு நிலா இருக்கும்மா’
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

10 comments:

    எல்லாமுமே அழகு அருள்..

    என்ன கவிஞரே...இப்ப எல்லாம் பதிவுகள் கலக்குது ;)

    ரெண்டு நிலா அழகுய்யா ;)

    நன்றிங்க்கா!!

    ஆமாப்பா... ரொம்ப நாள் கழிச்சு வர்றதால அப்படித் தெரியுது :)

    On August 3, 2010 at 6:30 AM சுடர்விழி said...

    இந்தியாவில் இரண்டு நிலா.....ரொம்ப அருமையாக இருக்கு...

    இந்தியாவில் இரண்டு நிலா…..ரொம்ப அருமையாக இருக்கு

    கருத்துக்கு நன்றிங்க சுடர்விழி!

    super, ennala mudiyala............

    நன்றிங்க ஆனந்த்

    On March 9, 2011 at 12:00 PM vinoth said...

    very nice

    On June 20, 2011 at 8:25 AM selvam said...

    nice.......