புகைப்படம்

மழையில் நனைந்த உனது படத்திலிருந்து
துளித்துளியாய் சொட்டுகிறது
அழகு.

*

பூக்கடையில் யாரோ
உனது புகைப்படம்
விற்கிறார்கள்.

*

உனது படங்கள் இரண்டைக் காட்டி
எதில் அழகாயிருக்கிறேனென கேட்கிறாய்.
அப்படியே படம் பிடிக்கலாம் போலிருக்கிறது.

*

நீயிருப்பது
புகைப்படமுமல்ல, நிழற்படமுமல்ல
இசைப்படம்.

*

விளக்கணைந்த இரவுகளில்
உனது படம் ஒளிர
வெளிச்சமாகிறது வீடு.
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

18 comments:

    :))

    புன்னகைக் குவியலாய் ஒரு புகைப்படக் கவிதை !!!
    கவிதை உபயம் செய்த புகைப்படத்திற்கு வாழ்த்துகள் !!!

    வாங்க.. வாங்க.. எப்படி இருக்கீங்க? நலமா?

    புன்னகை வாழ்த்துக்கு நன்றிங்க கவிதை ரசிகை!!

    On March 3, 2011 at 8:59 AM janani said...

    lovely.....

    முதல் கவிதையில் இருந்து காதல் சொட்டுகிறது :)

    On March 12, 2011 at 4:41 AM sumathra said...

    iniye kavithaigal thantha ungalukku nantrigal

    On March 12, 2011 at 4:41 AM sumathra said...

    superb..

    On March 13, 2011 at 2:10 PM sabeen said...

    poo kadaiil yaro oun pugai padam virkerargal. excellant. simply superb

    இவ்வலைதளம் மழையில் நனைந்த ஆலமரம்!! இலைகளிலிரிந்து சொட்டுபவை அனைத்தும் மழைத்துளிகளல்ல... கவிதைத்துளிகள்!!

    On April 2, 2011 at 8:23 AM shanthi said...

    seriously an lovely poets i love it.............

    On April 13, 2011 at 8:31 AM karthini said...

    Honey malayil nanaintha Mathiri erunthathu unga Kavithaigal. /Thank for ur parents.

    On May 18, 2011 at 11:51 AM மோனி said...

    உங்கள் கவிதைகளை இன்றுதான் முதன் முதலாகப் படிக்கிறேன்.... படித்தவுடன் தான் தெரிகிறது எத்தனை காலங்கள் வீணாக்கி விட்டேன் என்று! மிக அருமையான கவிதைகள்... உங்கள் கவிதைகள் தொடரட்டும்...

    On May 31, 2011 at 10:37 AM SARAVANAAA said...

    hi/.............. ungaludaiya kalavadiya kavithaigal nanraga irukkinradhu,,,,,,,,
    by ungal nanban

    superbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

    realy nice

    NANPA KALKITINNGA VERY AND SUPERPPPPPPPPPPPPPPPPPPPPPP NANPA

    நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதைகளை படிகிறேன், <<>>! இது காதல் கவிதை, படத்தை எடுத்துவிட்டு "முகம்" என்று போட்டால் அது ரொமான்ஸ் கவிதை!