இப்பொழுது வந்ததற்கு பதிலாக, நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

அப்பொழுது அவரெனக்கு நல்ல தோழியாக மட்டும் தான் இருந்தார். எனது குறைகளை குறையென மட்டுமே சொல்லாமல் திருத்திக்கொள்ளும் வழியினை சொல்லித் தருவதிலும், என்னால் தீர்த்துவிட முடியாதெனத் தெரிந்த போதும் தனது வருத்தங்களை என்னிடம்… என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதிலும், தனது நெருங்கிய தோழிகளைக்காட்டிலும் என் மீது அவருக்கு அன்பும், நம்பிக்கையும் அதிகமுண்டென்பதை அவருடைய செயல்கள் அனிச்சையாய் நிரூபித்துக்கொண்டே இருந்தன. எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும், அவரது அருகாமையில் மட்டுமே நான் முழுமையடைவதாய் உணர்ந்துகொள்ளத் துவங்கிய போதும், எங்களுக்குள் முளைத்த நட்பு காதலாய் மலருமென நான் எதிர்பார்க்க வில்லைதான். ஆனாலென்ன? நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே?

காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா? காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?

இரவுநேரப் பேருந்தில் தனியேப் பயணிக்கும் உங்கள் காதலி நெடுஞ்சாலை உணவகத்தில் பேருந்து நின்றபோதும் தனியே செல்ல பயந்து சாப்பிடவில்லையென அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி இரவு முழுக்க உங்களை உறக்கமிழக்கச் செய்திருக்கிறதா? உங்களுக்கு நம்பிக்கையில்லாத போதும் உங்கள் பிறந்தநாளில் நெடுந்தூரம் தனியே பயணித்து கோவிலுக்கு சென்று பிரார்த்திக்கும் உங்கள் காதலியின் அன்பைப் புரிந்து கொள்ள, உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறதா? சின்ன விசயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்ளும் உங்கள் காதலியிடம் பெரிய விசயத்தையும் கோபமூட்டாமல் சொல்லிவிடும் கலையை, காதல் உங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா? இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?

பெற்றோர் சம்மதிக்காத நிலையில் வீட்டைவிட்டு ஓடிவந்தாலும் இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்களெனும் நம்பிக்கை தனக்கிருப்பதாக உங்கள் காதலி உங்களிடம் உளறியதுண்டா? அப்படி சொன்னபோதும் கூட நீங்கள் அவரை வீட்டைவிட்டு ஓடிவர சொல்லிவிட மாட்டீர்கள் எனும் அவரது நம்பிக்கையை நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்களா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?

காதலுக்காக உயிரிழப்பதைப்போலவே நீங்கள் காதலுக்காக உயிரை இழந்ததுண்டா எனக்கேட்பதும் முட்டாள்தனம் தான். ஆனால் உங்கள் உயிரை விட அதிகமாய் நீங்கள் நேசிப்பவர்கள் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பை, காதலினால் இழந்திருக்கிறீர்களா எனக் கேட்கலாம். உங்கள் காதலி உங்களைத்தவிர வேறொருவரை மணக்கமாட்டாள், உங்களுக்காக வீட்டைவிட்டு வரவும் தயாராயிருக்கிறாள் என்பதையெல்லாம் சொல்லி உங்கள் வீட்டில் சம்மதம் வாங்கிக் காத்திருக்கையில் காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? நான் குடித்துக்கொண்டிருக்கிறேன். இது இருபத்து நான்காவது கோப்பை. பார்த்தீர்களா… அவருக்கும் இருபத்து நான்கு வயதுதான். என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

யெஸ்! மிஸ்டர் எமன்! நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.

----------------------------------------------------------

ஸ்ரீ துவங்கிய தொடருக்காக எழுதிய சிறுகதை.

விதிமுறைகள்:

1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.

நான் அழைப்பவர் – இம்சையரசி
வாசித்தது பிடித்திருந்தால் எனது, செய்தியோடையை இணைத்துக் கொள்ளுங்கள்!
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

68 comments:

    Naandhaan first??

    :-( என்ன அண்ணா இவ்ளோ நேரம் எமன் கிட்டயா பேசிட்டு இருந்தீங்க??

    //நல்ல நட்பிலிருந்து மலர்வது காதலுக்கும் அழகுதானே?//
    ஓகோ அப்படியா?? ;-)

    //எனக்குள் மட்டுமே கூடு கட்டிக் குடியிருந்த எனது எதிர்காலக் கனவுகளெல்லாம் சிறகடித்து அவரிடம் பறந்து சென்றபோதும்//
    அழகான வரிகள்..!! :-)

    //காதலிக்கிறோமெனத் தெரிந்த பின்னும் வெளிப்படையாய்ச் சொல்லிக்கொள்ளாமலே காதலிக்கும் இன்ப அவஸ்தையை அனுபவித்திருக்கிறீர்களா?//

    இல்லையே...!! :-(

    அச்சச்சோ நிறைய கேள்விகள் கேட்டிருக்கீங்க அதெல்லாத்துக்கும் என்னால ஒன்னொன்னா பதில் தர முடியல. :-( முதல்ல படிக்க ஆரம்பிக்கும் போது யார் யார் கிட்ட கதை சொல்றா?? கதை சொல்றது ஆணா,பெண்ணா-னு ஒரு சின்ன குழப்பம்(?!) வருது.ஆனா படிச்ச பிறகு கதை ரொம்ப நல்லா இருந்தது. :-)

    உங்ககிட்ட விலாவாரியா பேச வேண்டி இருக்கு...
    நான் அப்பாலிக்கா வரேன் அருள்..
    பதிவு கொஞ்சம் இல்ல. நிறைய யோசிக்க வைச்சிடுச்சு...

    ம்.. ஏன் இப்ப வந்தீங்க ன்னு கேக்கற கேள்வியை யமனை விட்டுவிட்டு கதையை படிப்பவர்களை மட்டும் பார்த்து கேட்டால் நல்லா இருக்குமே..

    அருள்னா அருமை... ;) ;) அப்படியா அருள்.. !! செம பதிவு... ;) ;) ;) வாழ்த்துகள்..!! ;) ;) முதல் வரி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு மாதிரியே ஒரு எதிர்பார்க்கமுடியாத திருப்பத்தோட முடிவு..!! ;) ;)

    //குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?.... // வாய்ப்பே இல்லாத வரிகள்... !!

    "காதல் எனபடுவது யாதெனில்" தொடர் அருளால் அமோகமான ஆரம்பத்தில் மகிழ்ந்த வாசகனின் இனி தொடரும் தோழர்கள்/தோழிகளுக்கும் சிறந்த பதிவுகள் தர வாழ்த்துகிறேன்...!!

    On July 9, 2008 at 8:15 AM Maragathavalli said...

    thalaippu ku yaettra kadhai...
    kaadhaluku unmai artham idhuva..
    alla idhu dhaan unmai yaana kaadhala..

    vaazhthukkal..
    inum sirappaha ezhudha vaazhthukkal nanbarae...

    /Naandhaan first??/
    ஆமா.. கோப்பை வேனுமா? :)

    /என்ன அண்ணா இவ்ளோ நேரம் எமன் கிட்டயா பேசிட்டு இருந்தீங்க??/
    ஆமா… அவன் என்னோட காலேஜ்மேட்… பாத்து ரொம்ப நாளாச்சு… அதான் டீ குடிச்சிட்டே பேசிட்டு இருந்தோம் ;)

    /ஓகோ அப்படியா?? /
    ஆமா.. தெரியாதா?

    /அழகான வரிகள்..!! /
    நன்றி!

    /இல்லையே…!! /
    ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க :)

    /அச்சச்சோ நிறைய கேள்விகள் கேட்டிருக்கீங்க அதெல்லாத்துக்கும் என்னால ஒன்னொன்னா பதில் தர முடியல. முதல்ல படிக்க ஆரம்பிக்கும் போது யார் யார் கிட்ட கதை சொல்றா?? கதை சொல்றது ஆணா,பெண்ணா-னு ஒரு சின்ன குழப்பம்(?!) வருது.ஆனா படிச்ச பிறகு கதை ரொம்ப நல்லா இருந்தது./
    நன்றி!!!

    /உங்ககிட்ட விலாவாரியா பேச வேண்டி இருக்கு…
    நான் அப்பாலிக்கா வரேன் அருள்..
    பதிவு கொஞ்சம் இல்ல. நிறைய யோசிக்க வைச்சிடுச்சு…/

    நீங்க காமடி எதுவும் பண்ணலயே??? இது கதைதான் ரீகன் :)

    /ம்.. ஏன் இப்ப வந்தீங்க ன்னு கேக்கற கேள்வியை யமனை விட்டுவிட்டு கதையை படிப்பவர்களை மட்டும் பார்த்து கேட்டால் நல்லா இருக்குமே../

    எமனும் நம்ம கதைய படிக்க வந்துட்டார் போல… விடுங்க்கா அவரும் படிச்சுட்டு போகட்டும்!!

    /அருள்னா அருமை… ;) அப்படியா அருள்.. !! செம பதிவு… ;) வாழ்த்துகள்..!! ;) முதல் வரி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு மாதிரியே ஒரு எதிர்பார்க்கமுடியாத திருப்பத்தோட முடிவு..!! ;)/

    /“காதல் எனபடுவது யாதெனில்” தொடர் அருளால் அமோகமான ஆரம்பத்தில் மகிழ்ந்த வாசகனின் இனி தொடரும் தோழர்கள்/தோழிகளுக்கும் சிறந்த பதிவுகள் தர வாழ்த்துகிறேன்…!!/

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க ஆல்பர்ட்!!!

    /thalaippu ku yaettra kadhai…
    kaadhaluku unmai artham idhuva..
    alla idhu dhaan unmai yaana kaadhala..
    vaazhthukkal..
    inum sirappaha ezhudha vaazhthukkal nanbarae…/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க மரகதவல்லி!

    நல்லாருக்கு மாப்பி ;)

    நன்றி கோபி!

    இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?
    இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?
    இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?
    இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?
    இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

    அடப்போங்கப்பா.. நீங்களும் உங்க காதலும்.. :(

    "விடிந்தால் உங்கள் காதலிக்கு திருமணம் என்ற நிலையில் உறங்கப் பிடிக்காமல் இரவு முழுக்க வோட்கா குடித்திருக்கிறீர்களா? "

    முன்பே வந்திருக்கலாம் இந்த பதிவு.. :(

    காதல் ஒரு பொய் விளையாட்டு.. அதில் அதிகமாய் பொய்யுரைப்பர்வர்கள் வெற்றியாளர்கள்..

    தோற்ப்பவர்கள் பின் எமனோடு விளையாடுவர்..

    இக்கதை நாயகனை போல..

    ஆனால் மிக அழகான பதிவு.. :)

    kathal yanbathu oru poi

    எப்படி தல...முன்னால உக்காந்து பேசுற மாதிரி இருந்திச்சு எப்படி இவ்வளவு இயல்பா எழுத முடியுது உங்களுக்கு...

    காதல் அதன் தனித்துவங்களே அவைதானோ...

    (உங்களை கேட்டா தெரியும்னு சொன்னாங்க...;)

    இந்த தொடரை குறைஞ்சது ஒரு 100 பேராவது தொடரணும் அண்ணன் விட்டுடாதிங்க...

    உணர்வு பூர்வமா இருந்திச்சு நிறையக்காதல்... வரிகள்முழுவதும்...

    ///என்ன? காதல் தோல்விக்காக குடிப்பது முட்டாள்தனமா? காதல் தோல்விக்காக யார் குடிக்கிறது? என்னுடைய துயரங்கள் உங்களுக்குப் புரியுமா? அவருக்கு சைனஸ் தொல்லை இருப்பதால் மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்கும். சின்ன விசயத்துக்கெல்லாம் கோபம் வரும். ஒரு விபத்தில் அவருடைய இடது கையில் எலும்புமுறிந்து பிளேட் வைத்திருப்பதால் எடை தூக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செண்ட், டியோடரண்ட் எல்லாம் அவருக்கு அலர்ஜி. கூட்டத்தில் சாப்பிடப்பிடிக்காது. அதிக நகைகளோ, மேக்கப்போ விரும்ப மாட்டார். புடவையைவிட சுடிதார்தான் பிடிக்கும். இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்ததற்குப் பதிலாக மகிழ்ச்சியாக இருந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே வந்திருக்கலாம்.////

    கொன்னுட்டிங்க தல... 25 வது கோப்பபையை எனக்கு ஊத்துங்க...

    திரும்பவும் சொல்கிறேன் ஸ்ரீ அண்ணனுக்கு நான் போட்ட பின்னூட்டத்தை ஒரு வாட்டி படிச்சுப்பாருங்க...பேச நிறைய இருக்கிறது...

    நன்றி தல நான் உங்கள் ரசிகன்...

    ஏற்கனவே சொன்னதுதான்.. இருந்தாலுக் திரும்பவும் - கத ஜூப்பரு!

    //# mani Says:
    July 10th, 2008 at 4:34 pm

    kathal yanbathu oru poi
    //

    இந்தக் கருத்தை நான் தாறுமாறாக வழிமொழிகிறேன்!

    வழக்கம்போல கலக்கிட்டீங்க அருளு... அருமையான வர்னணைக் கதை... :)))

    On July 16, 2008 at 8:10 AM Mathi said...

    Thiru Arutperungo,
    Migavum nandraga irukiradhu...aanal eppavumae Kadal velladha???....aval inoruvarukku en vitukodukarangal..batilaga poradalamae..

    illaiyenilkadalikavae vendamae.....en siramam....

    aga mothathil neengal kadal oru unarvu dhanae thavira..valkai illaya...kadal endral kastam dhana????

    இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?
    இப்படி கட்டுப்பாடற்ற அன்பில் துவங்கவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?
    இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?
    இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை உருவாகாவிட்டால் அப்புறமென்ன காதல்?
    இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?


    inadha alavukku love pannittu poradi jeyikka dhairiyatha kodukalanna appramenna kadhal?

    On July 18, 2008 at 2:58 AM லோகநாதன் said...

    உங்க வெப் பேஜ நான் இன்னைக்கு தான் முதல் தடவையா பாக்குற..
    ஆனா இது வரைக்கும் பாக்காம இருந்ததுக்கு வருத்தப்படற...



    //இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்//

    மிக அருமை... ரொம்ப நல்லாருக்கு...
    காதலை விட காதல் தோல்விதா அழகு...
    என்னையும் இனி உங்க ரசிகனா சேத்துக்கங்க...

    த‌ல இதெல்லாம் உண்மையா அனுப‌விக்காம‌ எழுத‌ முடியுமா? எழுத‌ முடிஞ்சா நீங்க‌ த‌லையே தான். :)

    ஒவ்வொரு வார்த்தையும் கொல்லுது த‌ல‌.

    /அடப்போங்கப்பா.. நீங்களும் உங்க காதலும்../

    :)

    /முன்பே வந்திருக்கலாம் இந்த பதிவு../

    ஏங்க??

    /காதல் ஒரு பொய் விளையாட்டு.. அதில் அதிகமாய் பொய்யுரைப்பர்வர்கள் வெற்றியாளர்கள்.. /

    அப்படியா?

    /தோற்ப்பவர்கள் பின் எமனோடு விளையாடுவர்..

    இக்கதை நாயகனை போல../

    எல்லாருமே ஒருநாள் போய் விளையாடலாம் விடுங்க...

    /ஆனால் மிக அழகான பதிவு.. /

    :)நன்றி!

    /kathal yanbathu oru poi/

    கருத்துக்கு நன்றிங்க மணி!

    /எப்படி தல…முன்னால உக்காந்து பேசுற மாதிரி இருந்திச்சு எப்படி இவ்வளவு இயல்பா எழுத முடியுது உங்களுக்கு/

    அப்படியா? ஒருவேளை கணினி முன்னால உக்காந்து திரைய முறைச்சுப்பாத்துக்கிட்டே தட்றேனே அதனால இருக்குமோ?

    /காதல் அதன் தனித்துவங்களே அவைதானோ/

    தெரியலங்க!

    (உங்களை கேட்டா தெரியும்னு சொன்னாங்க;)/

    யார் அந்தப் பாசக்கார பயபுள்ள? ;)

    /இந்த தொடரை குறைஞ்சது ஒரு 100 பேராவது தொடரணும் அண்ணன் விட்டுடாதிங்க/

    தொடர்ந்து போகுதுன்னுதான் நெனைக்கிறேன்!

    /உணர்வு பூர்வமா இருந்திச்சு நிறையக்காதல் வரிகள்முழுவதும்/

    நன்றி :)

    /கொன்னுட்டிங்க தல 25 வது கோப்பபையை எனக்கு ஊத்துங்க/

    ஆமா. கத சொன்னவன தான் கடசில கொன்னுட்டமே ;) 'குவார்ட்டர' நீங்க அடிக்கலாம்னு பாக்கறீங்களா? ;)

    /திரும்பவும் சொல்கிறேன் ஸ்ரீ அண்ணனுக்கு நான் போட்ட பின்னூட்டத்தை ஒரு வாட்டி படிச்சுப்பாருங்க…பேச நிறைய இருக்கிறது/

    படிச்சுட்டேன் தமிழன். ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு பாசம் :)

    /நன்றி தல நான் உங்கள் ரசிகன்/

    ரசிகனெல்லாம் எதுக்கு? நண்பன்னு சொல்லுங்க!

    /ஏற்கனவே சொன்னதுதான்.. இருந்தாலுக் திரும்பவும் - கத ஜூப்பரு!/

    நன்றி :)

    /kathal yanbathu oru poi

    இந்தக் கருத்தை நான் தாறுமாறாக வழிமொழிகிறேன்!/

    :))

    /வழக்கம்போல கலக்கிட்டீங்க அருளு அருமையான வர்னணைக் கதை… :)))/

    நன்றிங்க ஜி!

    /Thiru Arutperungo,
    Migavum nandraga irukiradhu aanal eppavumae Kadal velladha???.aval inoruvarukku en vitukodukarangal..batilaga poradalamae../

    நன்றிங்க. அப்படியும் சில காதல்கள் இருக்கின்றன.

    /illaiyenilkadalikavae vendamae..en siramam./

    நல்ல கேள்வி. ஆனா பதில் தெரியல!

    /aga mothathil neengal kadal oru unarvu dhanae thavira..valkai illaya kadal endral kastam dhana????/

    சிலருக்கு துயரம். சிலருக்கு இனிமை :)

    /inadha alavukku love pannittu poradi jeyikka dhairiyatha kodukalanna appramenna kadhal?/

    கதையோட நாயகிகிட்டதான் கேட்கனும். ஆனா அவங்கதான் கதைல வரவே இல்லையே!

    /உங்க வெப் பேஜ நான் இன்னைக்கு தான் முதல் தடவையா பாக்குற..
    ஆனா இது வரைக்கும் பாக்காம இருந்ததுக்கு வருத்தப்படற/

    முதல் வருகைக்கு வரவேற்பும் நன்றியும் லோகநாதன்!

    //இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்//

    /மிக அருமை ரொம்ப நல்லாருக்கு
    காதலை விட காதல் தோல்விதா அழகு
    என்னையும் இனி உங்க ரசிகனா சேத்துக்கங்க/

    நன்றிங்க. ரசிகனல்ல, நண்பன் :)

    /த‌ல இதெல்லாம் உண்மையா அனுப‌விக்காம‌ எழுத‌ முடியுமா? எழுத‌ முடிஞ்சா நீங்க‌ த‌லையே தான்.

    ஒவ்வொரு வார்த்தையும் கொல்லுது த‌ல‌./

    நன்றிங்க முருகானந்தம். என்ன வச்சி காமெடியெதுவும் பண்ணலயே?

    On July 29, 2008 at 11:07 AM tamil said...

    Very nice. Romba alagana story. epdinga ipdi ellam think panringa...very nice... unga ella storyum padichuruken(almost).. but this one is ultimate.

    /Very nice. Romba alagana story. epdinga ipdi ellam think panringa very nice unga ella storyum padichuruken(almost).. but this one is ultimate./

    தொடர்ந்து வாசிக்கிறதுக்கும், உங்க கருத்துக்கும் நன்றிங்க தமிழ்.

    On August 7, 2008 at 12:49 PM vhalarmathi said...

    hmm..simplea ethuvume solle mudiyale..rombe nalla irukku..ithu kuude rombe cinne vaarthai than..really great..ithai padichi naan unge rasigai aagiden..en vaaltukkal..

    /hmm..simplea ethuvume solle mudiyale..rombe nalla irukku..ithu kuude rombe cinne vaarthai than..really great..ithai padichi naan unge rasigai aagiden..en vaaltukkal../

    கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வளர்மதி!

    On August 20, 2008 at 6:58 AM Karthik said...

    Awesome!

    அருமை.. படித்து முடிக்கையில், சொல்லமுடியாத கனம் மனதில்..
    இன்றிலிருந்து, உங்களின் புதிய வாசகன் நான்..

    On September 2, 2008 at 10:08 AM சங்கீதன் said...

    நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கம் இழந்தேன்... அட்டகாசமான சிறு கதை!

    /Awesome!/ நன்றிங்க கார்த்திக்.

    /அருமை.. படித்து முடிக்கையில், சொல்லமுடியாத கனம் மனதில்..
    இன்றிலிருந்து, உங்களின் புதிய வாசகன் நான்../

    நன்றிங்க பாலமுருகன்.

    /நீண்ட நாட்களுக்குப் பிறகு தூக்கம் இழந்தேன்… அட்டகாசமான சிறு கதை!/

    நன்றிங்க சங்கீதன்!

    On October 31, 2008 at 10:15 AM SathyaJeeva said...

    its really superb....

    On January 2, 2009 at 9:04 AM Venkatesh said...

    ஆஹா.. சூப்பர் மச்சான் ..

    engalai nagal meendum parthum (muthal inthu pathiyel)

    very welll done.. keep up the good work...

    சிலருக்கு துயரம். சிலருக்கு இனிமை by K Dhanasekar

    On August 24, 2009 at 7:07 AM sambath said...

    காதலிக்குப் பிடித்த பாடலை செல்பேசியில் அழைப்பிசையாகவும், காதலிக்குப் பிடித்த புகைப்படத்தை கணினித் திரையிலும், காதலியின் பிறந்த நாளைக்குறிப்பிடும் எண்ணில் செல்பேசி இணைப்பும் வைத்துக்கொண்டதுண்டா? காதலியின் அறைத்தோழி உதவியுடன் காதலிக்குப் பிடித்த பரிசுப்பொருளை அவள் தலையணைக்கடியில் ஒளித்துவைத்து, இரவு பனிரண்டு மணிக்கு அழைத்து பிறந்த நாளுக்கு வாழ்த்தி, தலையணையை எடுத்துப்பார்க்க சொன்னதுண்டா? நீங்கள் தேநீரும் உங்கள் காதலி குளிர்பானமும் குடிக்கின்றபோதும் தேநீர் சுட்டுவிட்டதாய்ச் சொல்லி அவள் குடித்த பாதி குளிர்பானம் குடித்ததுண்டா? இந்த கிறுக்குத்தனங்கள் கூட இல்லையென்றால் அப்புறமென்ன காதல்?


    very very super sentence

    நண்பரே ஒரு கணம் என்னை அழவைத்து விட்டீர்கள்...
    கிட்டடஹட்ட நானும் இந்த நிலையில் தான் உள்ளேன்

    On December 18, 2009 at 7:45 AM udhayam said...

    குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? yes.

    On April 9, 2010 at 3:23 PM ramkumar said...

    காதலித்து பார் காதல் புரியும்
    இல்லையேல்
    தோற்ற காதலில் புரிந்து கொள்வாய்

    On April 9, 2010 at 3:26 PM ramkumar said...

    இப்படி ஆயிரம் விசயங்கள் அவரைப்பற்றி எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் அவருடையக் கணவர் சரியாகப் புரிந்து கொண்டு அவரை நேசிப்பாரா என்று நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும்

    இது என் வாழ்க்கையிலும் நடந்தது

    On April 12, 2010 at 9:30 AM ramkumar said...

    காதலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதையறிந்து பதறியிருக்கிறீர்களா? காதலை நேரடியாய்ச் சொன்ன காதலி தன்னை மறந்துவிடச்சொல்வதற்கு தோழியைத் தூதனுப்பிய போதும் உங்களுக்கு அவர் மீது கோபம் வராமல் பரிதாபம் வந்ததுண்டா? குடும்பத்தின் மதிப்பையும் இழந்து காதலியையும் இழந்து சொந்த வீட்டுக்குள்ளேயே ஓர் அகதியைப் போல வெறுமையை உணர்ந்திருக்கிறீர்களா? இந்த இழப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அப்புறமென்ன காதல்?

    my current situation

    On July 10, 2010 at 8:15 AM Moorthi said...

    நான் ரசிதத கவிதைகலில் அழ்கனவை...

    On October 5, 2010 at 7:23 AM KAJANA said...

    தனிமையில் உங்களைப் பொய்யாக கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் காதலி, அவள் தோழிகளுக்கு முன்னால் உங்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கவனித்திருக்கிறீர்களா? உங்களிடம் பேசும்போது ஒருமையில் அழைக்கும் காதலி, உங்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போது மரியாதையோடுக் குறிப்பிடுவதை ரசித்திருக்கிறீர்களா? அது, உங்கள் காதலியைப்பற்றி மூன்றாம் நபரிடம் நீங்கள் பேசுகையில் ‘அவள்’ என்பதற்குப் பதிலாக ‘அவர்’ என்று விளிக்க உங்களைப் பழக்கியிருக்கிறதா? இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை ஏற்படுத்தாவிட்டால் அப்புறமென்னக் காதல்?

    YES THIS LINE I LIKE

    On August 17, 2011 at 10:06 AM சாதிக் said...

    இதயத்தை உருக்கியது உங்கள் எழுத்துக்கள்...
    இரக்கமில்லா காதல்கள் இதை உணர வேண்டும்..!!

    On February 5, 2013 at 9:47 PM Mukeshcovai said...

    ENTHA KATHAI RASIPATHA VARUNTHUVATHA